உலகம் எந்தளவுக்கு மாறிப்போயிருக்கிறது என்பதை கவனித்தீர்களா?

வீதிகளிலும் உல்லாச விடுதிகளிலும் உலாவித் திரிந்த மனிதர்கள் எல்லோரும் வீடுகளுக்குள் முடங்கிப் போயிருக்கிறார்கள், ஆனால் அடைபட்டுக் கிடந்த அத்தனை விலங்குகளும் இன்று வீதியில் எந்தவித இடைஞலும் இன்றி உல்லாசமாய் திரிகின்றன. அவைகளுக்கு எந்தளவு சுதந்திரம்?

உனது மதமா? எனது மதமா? நீ என்ன இனம்? நான் என்ன இனம்? சிறுபாண்மை, பெரும்பாண்மை, சிறிய நாடு, வல்லரசு நாடு, வெள்ளையர்கள், கறுப்பர்கள், மேலைத்தேயம் கீழைத்தேய நாடுகள் என்ற பாகுபாடுகள் அத்தனையும் களைந்து ஒரு சொல்லாம் அத்தனை பேரும் ஒன்றாகியிருக்கிறார்கள். எப்படியான ஒற்றுமை?


அரசியல் வாதி தொடக்கம் அடிமட்ட ஏழை வரைக்கும் எந்தவித பாகுபாடும் இல்லை, எல்லோருக்கும் ஒரே நோய், ஒரே வைத்தியம், ஒரே மருந்து. எத்தனை சமத்துவம்?
பணம் படைத்திருக்கும் பாரிய செல்வந்தர்களுக்கு கூட அந்தப் பணத்தைக்கொண்டு பிடித்ததை வாங்கவோ, பிடித்த இடத்திற்கு போகவோ, பிடித்த உணவுகளை உண்ணவோ முடியாது ஆகிவிட்டது. பணத்தின் மதிப்பு அவ்வளவுதான் என்ன?
உனது இறைவனா? எனது இறைவனா என்று போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று புதைத்து ஏப்பமிட்ட அத்தனை பேரும் அவர்களது வணக்கஸ்தலத்தைக்கூட எட்டிப்பார்க்க முடியாத அளவுக்கு இழுத்துப் பூட்டுப் போட பட்டிருக்கிறது. இதோ இப்போது இறைவன் எல்லோருக்கும் ஒருவனாகி விட்டான்?
ஆகாயத்தில் விமானங்கள் இல்லை, வீதிகளில் வாகனங்கள் இல்லை, கடலிலோ கப்பல்கள் இல்லை, இயற்கை அப்படியே அமைதியாய் அழகாய் தூய்மையாக சுவாசித்துக்கொண்டிருக்கிறது அல்லவா. எத்தனை அழகு?
இறைவன் இல்லையென்றவர்கள் கூட கைகளையேந்தி எங்களை காப்பாறு என்று கூறுமளவுக்கு இந்த உலகம் எந்தளவு மாறிப்போயிருக்கிறது. இத்தனைக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ்!
இறைவன் பெரியவன் என்பதற்கு வேறென்ன அத்தாட்சி வேண்டும்?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *