ஒரு Smart Phone வைத்திருந்தால் தானும் ஊடகவியளாலர் தான்

ஊரடங்கு சட்டத்திலும் முடக்கப்பட்ட (LockDown) ஒரு பிரதேசத்திலிருந்து ஓர் செய்தியாளர் என தன்னை அறிமுகபடுத்திய ஒருவர், இங்கு மக்கள் உண்பதற்கு உணவுகள் இல்லை. குழந்தைகளுக்கான பால்மாக்கள் இல்லை எனவும், குறிப்பிட்ட ஒரு ஊர் மக்கள் உதவ வேண்டும் எனவும் கேட்டு WhatsApp மூலமாக நேரம், காலம் எதுவுமில்லாமல் குரல் பதிவை இடுகிறார். !

ஊர் முழுக்க பரவிய அந்த குரல் பதிவு இன்று எனக்கும் ஒருவர் அனுப்ப, குறிப்பிட்ட அந்த ஊரில் உள்ள ஒருவரை தொடர்பு படுத்திய பிறகு அவர் இவ்வாறு விளக்குகிறார். !

◾குறிப்பிட்ட அந்த குரல் பதிவை இட்டவர் 2 வருடங்களாக ஊரோடு தொடர்பில் இல்லாதவர்.

◾அந்த குரல் பதிவில் கூறுவது போல் உண்பதற்கு கூட உணவில்லாமல் இங்கு யாரும் இல்லை. எல்லோருக்கும், வசதி படைத்தவர்கள் உதவிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்


◾ 07/04/2020, 08/04/2020 ம் குறிப்பிட்ட அந்த பிரதேசத்திற்கு 7500 ரூபா பெறுதியான அவர் உணவு பொருட்களும், குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கும் உலர்உணவு + 3000 ரூபா, பணமும் பகிர இருப்பதாக தெரிவித்தார். !

⛔ WhatsApp குழுமங்களில் உங்களுக்கு வருகின்ற குரல் பதிவுகளின் உண்மை நிலையை அறியாமல் பகிர வேண்டாம் !

⛔ நேரம்/காலம் இல்லாத குரல் பதிவுகளை பகிர வேண்டாம்.

ஒரு Smart Phone வைத்திருந்தால் தானும் ஊடகவியளாலர் தான் என பலபேர் எண்ணியிருப்பதால் WhatsApp ல் வருகின்ற தகவல்களை பகிர முன் குறைந்தது இரண்டு தடவைகளாவது ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளுங்கள். !

குறிப்பு – LockDown செய்யப்பட்ட அந்த பிரதேசத்தில் உள்ளவரை தொடர்பு படுத்தி ஊர்ஜிதப்படுத்திய பிறகு எழுதிய பதிவு !

Azeem jahufer
07.04.2020
21:18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *