சிங்கங்கள் தங்களோட சரித்திரத்த சரியா எழுதலனா வேட்டைக்காரன் சொல்றது தான சார் சரித்திரம்னு ஊரு நம்பும்…


அதனால தான் அடிக்கடி சரித்திர நிகழ்வுகள எல்லாரும் நியாபகப்படுத்திட்டே இருக்கது
கிரிக்கெட்ல இதுவர இந்தியா ரெண்டு தடவ உலகக்கோப்பை வாங்கிருக்குஅந்த உலகக்கோப்பை வாங்குன ரெண்டு கதையிலயுமே பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது… Like a Best Commercial Movie…

2011 உலகக்கோப்பைக் கனவு 2007லயே சச்சினுக்கு ஆரம்பிச்சுருச்சுமும்பைல சொந்த மண்ணுல உலகக்கோப்பை ஜெய்க்கிற மொமண்ட் எப்டி இருக்கும்னு நினைச்ச அப்றோ சச்சின் இன்னும் வேகமா ஓட ஆரம்பிச்சார்… 2008 சிபி சீரிஸ்ல ஆஸ்திரேலியாவ சம்பவம் பன்ன அப்போவே தோனி எல்லாருக்கும் ஒரு சைலன்ட் மெசேஜ் அனுப்பிட்டார்உலகக்கோப்பை எங்களுக்கு தான்னு
இந்தியன் பிட்ச்க்கு ஏத்த மாறி சரியான 15 பேர். அதிரடியான ஓபெனிங், லெப்ட் அன்ட் ரைட் காம்பினேஷன்ல சரியான மிடில் ஆர்டர்ஹர்பஜன், அஸ்வின், சாவ்லா ஸ்பின்னுக்கு ஜாகீர், முனாப் படேல், ஸ்ரீசாந்த், நெஹ்ரானு ஸ்பீடுக்குனு எவ்ளோ பெரிய யானை வந்தாலும் அடிக்கக்கூடிய டீம்.
ஆனா இந்தியாவுல இருக்க ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுக்கும் ஒரு மேட்ச் கொடுக்கனும்அதா பெரிய பிரச்னை. எல்லா மைதானமும் நமக்கு எதிரா திரும்புறதுக்கு 100% சான்ஸ் இருக்கு. சரிகளமிறங்கியாச்சு. யானை வந்த என்ன, கங்காரு வந்தா என்ன. கப்புனு அடிச்சே ஆகனும்.
முதல் ஆட்டமே 2007 நம்மள அடிச்ச வங்கதேசம் கூடஅவங்க மைதானம்அவங்க ஊர்ஆனா சும்மா அதிருதுல ரேஞ்சுக்கு பதிலடி கொடுத்துட்டு வந்தோம். அதுக்கடுத்து இங்கிலாந்து கூட டிரா, அயர்லாந்து நெதர்லாந்து கூட வெற்றி, தென் ஆப்பிரிக்கா கூட தோல்வி, வெஸ்ட் இன்டீஸ் கூட வெற்றினு காலிறுதிக்கு போன ஆஸ்திரேலியா கூட மோதனும்னு சொல்லி நிப்பாட்டுறாங்க.
அவங்கள அடிச்சுட்டு யுவராஜ் கத்துன கத்து… 2003 எப்டி அந்த கிரீஸ் டப்பாவ உதச்சனு சொல்லி வச்சு அடிச்சது மாறி இருந்துச்சு
செமில பாகிஸ்தான ப்ரஷர் பண்ணி முடிச்சுவிட்டதுனு கடைசியா இலங்கை கூட இறுதிப்போட்டி… 10ஆவது பப்ளிக் எக்ஸாம் நடக்கும்போது உலகக்கோப்பை நடந்துச்சுபசங்க எல்லாரும் சேர்ந்து மேட்ச் பாத்துட்டு இருக்கோம்.
இலங்கைல சைட் ஜெயவர்தனே சதம் அடிச்சு கடைசில பெரேரா வந்து அதிரடியா ஃபினிஷ் பண்ணி 274 அடிக்கிறாங்கவான்கடேல 275ப்ரஷர்லயே விக்கெட் விட்ருவோமேனு மூஞ்சி செத்து போய் எல்லாரும் உட்கார்ந்து இருந்தோம்.
சச்சின், சேவாக் அவுட்மலிங்கா விக்கெட் எடுத்தோன வான்கடேவுல இலங்கை ரசிகர்களோட சவுண்ட் பொளக்குது. கம்பீர், கோலி பார்ட்னரஷிப் கொஞ்சம் கொஞ்சமா நல்லா போகுது. இருந்தாலும் தில்ஷானோட அந்த கேட்ச்அய்யயோ போச்சானு பசங்களுக்குள்ள பேசத் தொடங்கிட்டாங்க
யுவராஜ் வருவார்னு பாத்தா தோனி வந்தாருஅப்போ, என்னோட அண்ணே தோனி இலங்கை கூட எப்பவும் நல்லா அடிப்பான்பாப்போம்னு சொல்லஎல்லாரும் மேட்ச்சையே பாத்துட்டு இருந்தோம்
கொஞ்சம் கொஞ்சமா மேட்ச்ல நம்ம கை ஓங்கச்சுகப் கண்ணுக்கு தெரியத் தொடங்குச்சுகடைசியாக தோனி அடிச்ச அந்த சிக்ஸ்ரவி சாஸ்திரியோட அந்த கமெண்ட்ரிஇப்போவர மனப்பாடம்.
சச்சினோட உலகக்கோப்பைக் கனவு, 23 வருஷம் கழிச்சு நினைவாச்சுஆனா வேறு யாருக்கும் கிடைக்காத அளவுக்கு மாஸா இந்தியாவுக்கு அமைஞ்சுச்சு…. சொந்த மண்ணுல உலகக்கோப்பை அடிச்ச முதல் டீம்டானு உலகத்துக்கே காட்டினோம்.
உலகக்கோப்பை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே யுவராஜ் சச்சினுக்காக நிச்சயம் உலகக்கோப்பைய ஜெய்ப்போம்னு சொன்னதோட நிக்காம, முன்னாடி நின்னு ஜெய்ச்சு கொடுத்தார். காலிறுதி, அரையிறுதில ரெய்னாவ ட்ரெம்ப் கார்டாக்(Trumpcard) பயன்படுத்துனது, இறுதிப்போட்டில யுவராஜுக்கு பதிலா முன்னாடி களமிறங்கி மேட்ச் முடிச்சது, இந்த முறை உலகக்கோப்பை மிஸ் ஆகாவே ஆகாதுனு சச்சின் ஆடின ஆட்டம், காலம் முழுக்க நிக்கிற மாதிரி பண்ணின சேவாக் சம்பவம், ஜாகீர் கானோட துல்லியம், ஹர்பஜனோட ஸ்பின், விராட் கோலியோட நான்காவது இடம்இப்படி இந்த உலகக்கோப்பைய ஜெய்ச்சதுக்கு நிறைய காரணங்கள் அடுக்கலாம். மொத்தமா இந்தியாவுக்கு அந்த உலகக்கோப்பை ஒரு பொக்கிஷம் தான்.
உலகக்கோப்பை ஜெய்ச்ச பின், சச்சின் ஒரு குழந்தை மாதிரி வந்து தோனியையும், யுவராஜையும் கட்டிப்பிடிச்ச அப்றோ சச்சின தூக்கிட்டு மைதானம் முழுக்க சுத்தி வந்துனு எப்போதும் மனசுக்கு நெருக்கமா அமைஞ்ச உலகக்கோப்பை அது
நான் இறப்பதற்கு முன்னாடி தோனி அடிச்ச அந்த சிக்ஸ் தான் பாக்கனும்.. இது சுனில் கவாஸ்கர் சொன்னதுஇந்த ஒரு வார்த்தை சொல்லும் அந்த உலகக்கோப்பை எவ்ளோ முக்கியமா இருந்துச்சுனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *