தனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து

கொழும்பிலிருந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற கடற்படையின் பஸ்ஸே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

வறக்காப்பொல பகுதியில்  இரு பஸ்களும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.இதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 3 கடற்படையினர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *