2011 World Cup

April 2, 2011
என்னோட அந்த ஒரு நாள் வாழ்க்கைல ரொம்பவே excited ஆஹ் இருந்தேன்.. உங்களையும் என்கூட கூப்ட்டுப்போறேன் அந்த ஒரு நாள் க்கு..
School ல Annual Exam. 9th Std அப்ப.. Geography Exam னு நினைக்கறேன்.. Saturday அன்னிக்கு.. Last Exam அது தான்..
அன்னிக்குனு பாத்து. Afternoon Session ல Exam..
Exam hall ல Exam எழுதவே தோணல.. Hall Supervisior கிட்ட.. Sir Sir Pls Sir Score சொல்லுங்க னு கேட்டுட்டு இருந்தேன்..
Sir ஒரு Half an Hour ல சொல்றேன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.. மனசுகேக்கலை.. exam ஏதோ கண்டமேனிக்கு எழுதிட்டு இருந்தேன்.. கொஞ்சம் நேரம் அப்புறம் வந்து SL Batting 5ஓவர் aachu.. 9 – 0 னு சொன்னாரு.. அப்ப தான் ஒரு Relief வந்துச்சு..
கொஞ்சம் நேரம் Interval ல் Rendu Staff அவங்ககுல.. Sir Dilshan வேற செமயா அடிக்கிறான் sir.. அவனை out ஆகணும்னு பேசிட்டு இருந்தாங்க.. கருமம் அது என்னோட காதுல கேக்க.. exam hall ல உக்காந்து Dilshan out ஆகணும்னு வேண்டிட்டு இருந்தேன்..
Exam 4மணிக்கு முடிச்சுட்டு.. Usain bolt கணக்கா வீட்டுக்கு ஓடி வந்தேன்.. Correct ஆஹ் அப்ப தான் 21over முடிஞ்சு இருந்துச்சு..
எதிர் வீட்டு பையன் என்னோட friend தான். அவங்க அப்பா முன்டா பனியன் ஓட match பாக்க நான் போன உடனே சொன்ன வார்த்தை..
*இந்த சங்கக்கார பையன் டாஸ் ஏமாத்திட்டான் அதுக்காகவே ஸ்ரீலங்கா இன்னிக்கு தோத்து போகும்னு *
நான் போய் பாத்த 1ஓவர் ல சங்கக்கார out.. அதுக்கு enga அபார்ட்மெண்ட் full ஆஹ் அவளோ சவுண்டு.. காரணம் Sanga எப்புடி ஆடுவாருனு நம்மக்கு தெரியும்..
அப்புறம் சமரவீரா அவுட் ஆக.. மறுபக்கம் jayawardene அடிக்க.. வீட்டுல ஜாலி ஆஹ் அம்மா மடில படுத்துகிட்டு பாத்துட்டு இருந்தேன்..
எங்க இருந்தோ வந்து Perara Zaheer ஆஹ் வெளுக்க.. ஸ்கோர் 274 போச்சு…
Right Chasing காலி னு எதிர்வீட்டு Uncle சொல்ல.. அதுலாம் இல்ல இன்னிக்கி Win பண்ணிடும் சச்சின் இருக்காரு னு நான் சொல்ல.. எங்க Appa Correct ஆஹ் Office முடிஞ்சு வீட்டுக்குள்ள வந்தாரு..
அப்பா கைல ஒரு வெடி Pocket இருந்துச்சு.. அப்பா வந்து என்கிட்ட.. Win பன்னவுடனே வெடிக்க ready ஆஹ் இருன்னு சொல்ல..
இன்னும் செம Jolly ஆஹ் இந்தியா Batting பாக்க உக்காந்தேன்.. எப்பயும் 6 6.30 மணிக்கு கந்தசஷ்டிகவசம் ஓடற வீட்டுல.. அம்மாவே டேய் Match வெய்னு சொன்னபோது.. அவளோ ஒரு நம்பிக்கை இந்தியா மேல..
பாத்த இன்னிங்ஸ் Second பால் ல சேவாக் அவுட்.. அப்பா Sehwag ஆஹ் திட்ட.. நான், அப்பா அதான் தலைவர் சச்சின் இருக்காரு.. பாத்துக்கலாம் னு சொல்ல…. Gambir வந்து ஒரு four அடிக்க மறுபடியும் ஒரு நம்பிக்கை வந்துச்சு..
சச்சின் அடிச்ச 3Four க்கு வீட்டுல குதிச்சுட்டு இருந்தேன்.. டக்குன்னு சச்சின் அவுட்.. அவளோ தான் என்ன பண்றது தெரில.. கோவத்துல அக்காவை திட்டிட்டு TV ஆஹ் ஆப் பண்ணிட்டு.. அம்மா மடில போய் படுத்துட்டு அழுவ ஆரம்பிச்சுட்டேன்..
*அம்மா அவளோ தான் மா.. இந்தியா தோத்துபோச்சுனு ஒரே அழுகை*
கோவத்துல அம்மா, அப்பா வா அந்த TV ஆஹ் off பண்ணி தொலைங்க னு சொல்ல… ஒரு Half an Hour கிட்ட அம்மா மடில படுத்துகிட்டு அழுதேன்..
அப்பா ஒரு வார்த்தை சொன்னாரு
*உன்னோட தலைவன் போய்ட்டான், என்னோட தலைவன் Dhoni இருக்கான்.. பாரு கண்டிப்பா அவன் cup நமக்கு கொண்டுவருவான்..*
மறுபடியும் TV On பண்ணி பொறுமையா பேசாம match பாத்துட்டு இருந்தோம்.. Kohli out.. அடுத்து Dhoni உள்ளேவந்தாரு..
*அப்பா இன்னும் நம்பிக்கை ஓட ஒரு வார்த்தை சொன்னாரு..
கபில் தேவ் அப்புறம் WC வாங்கி குடுத்தது Dhoni டா.. அப்பயே சச்சின் விட Dhoni தான் பெருசு எனக்கு.. T20WC வாங்கிக்குடுத்தவேண் க்கு.. இந்த 50ஓவர் WC வாங்கிக்குடுக்க தெரியாத.. பேசாம Match பாருன்னு சொன்னாரு *
அங்க புடிக்க ஆரம்பிச்சுது தோனி உன்ன 💗
பசங்களுக்கு அவங்க அப்பா தான் Hero.. ஆனா அந்த Hero க்கு ஒரு Hero வா இருந்துஇருக்காரு Dhoni.. அவர எப்புடி புடிக்காம போகும் 💗
தோனி அடிச்ச ஒரு ஒரு Four க்கு.. அப்பா Excite ஆகிபாத்துட்டு இருந்தாரு.. இன்னும் அதுலாம் கண்ணுல நிக்குது..
Final Six அடிச்ச உடனே.. அப்பா அம்மாவை கடிச்சுப்புடிச்சு அப்புடி ஒரு அழுகை.. அந்த மனுஷன் கடைசியா இந்தியா Win பண்ணி பாத்தது 1983 ல.. அப்புறம் இன்னிக்கி தான் அது நடந்துச்சு..
எனக்கு reaction இல்லாமசச்சின் சச்சின் னு கத்திக்கிட்டு .. Apartment பசங்ககூட Night 11மணிக்கு வெடி வெடிக்க கிளம்பிட்டேன்..
💗இந்த 2011 WC வீட்டுல எல்லாரையும் சந்தோஷ படுத்திச்சு 💗Family எல்லாரும் Night 12மணிக்கு ஏதோ Newyear மாறி போன் பண்ணி wish பண்ணிட்டு இருந்தாங்க 💗Dhoni பாத்தியா சச்சின் அழுகை பாத்தியா.. யுவராஜ் தான் வீரன் னு சொந்தங்கள் எல்லாரும் அவளோ சந்தோஷம் அன்னிக்கு 💗
இன்னிக்கு அதையே Match Retelecast ஆகுது.. அன்னிக்கு உங்ககூட இருந்தவங்க.. நீங்க சந்தோஷமா பகிர்ந்துக்கிட்ட Moments லாம் இன்னிக்கி இந்த Retelecast பாக்கும் போது ஞாபகம் வரும் 💗
சும்மாவா சொல்ராங்க Cricket is an Emotion அப்புடின்னு 💗..இன்னிக்கு Retelecast Miss பண்ணிடாதீங்க.. மறுபடியும் அந்த moments நெனைச்சு பாக்க இது ஒரு சந்தர்ப்பம் 💗..
தானை தலைவன் Dhoni னு அப்பா சொல்லுவாரு 💗.
இந்த WC காக எவளோ காலம் வேணாலும் தோனிக்கு பேன் ஆஹ் இருக்கலாம் 💗
பொதுவா நம்ம hero நம்ம நம்பிக்கை வீணடிக்காம last ல வந்து காப்பாத்துவாரு ல.. அதையே தானா தோனி அன்னிக்கு பண்ணாரு.. அப்ப 200% அந்த மனுஷன் Hero தான்..
என்னோட Favorite தோனி Moment அதுதான்..
Dhoni ஒரு சகாப்தம் 💗தோனி is Inevitable 💗
(உங்க அனுபவம் சொல்லுங்க 💗)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *