Corona

கொரானாவை ஏதோ ஐட்டமாக்கி “கைதட்டு , லைட் off பண்ணு ,விளக்கை மற்றும் பிடி ” கூத்துக்களுக்கு ஆலவட்டம் பிடிப்பவர்கள் சிலரின் ப்ரொபைலைப் பார்க்கிறேன்.ஒருவர்அக்கவுண்ட் கன்ஸல்டண்டாம்.பண வீக்கம்,எண்ணெய்கான யுத்தங்கள், உலக சந்தையில் டாலரின் வகிபாகம், யூரோ என்றெல்லாம் எக்கோனமிக்ஸ் கிளாஸ் எடுத்து உலக வங்கியின் இரும்புப் பூட்டையே ஆட்டி இருக்கிறார். ஆனால் மோடி என்று வரும் போது இண்டலக்சுவலாய் காவி நிறத்தில் குடை பிடிக்கிறார்.
ஸ்கூல் போகும் காலங்களில் ராஜேஷ் குமாரின் க்ரைம் நாவல்கள் தான் நமக்கு உலகம்.ராஜேஷ்குமார் பிசிக்ஸ் பட்டதாரி.”விளக்கம் ப்ளீஸ் விவேக்” என்று அறிவியல் கேள்வி பதில் எல்லாம் போட்டு அசரவைப்பார்.கொரானா என்பது ஒரு Nanometer விட்டமுடைய சக்திவாய்ந்த மைக்ரோஸ்கோப்ஸால் மட்டுமே பார்க்கக் கூடிய கிருமி என்று எழுதும் அவரது ப்ரொபைல் போய்ப் பார்த்தால் அவரும் “டேய் கொரானா ஓடிடு” என்று மோடி வீணை வாசித்துக்கொண்டு இருக்கிறார்.
இஞ்சினியர்கள், படித்தவர்கள் என்று நாம் நம்பிக் கொண்டு இருந்தவர்கள், எழுத்தாளர் ஜெயமோகனின் இலக்கிய சொம்புகள்,என்று இன்னும் பெரும் கூட்டம் க்யூவில் நின்று மோட்டு மூட நம்பிக்கையின் எச்சங்களை தரிசித்து இருக்கிறார்கள்.
மூன்றாம் உலக நாடுகளில் படிப்பும் வாசிப்பும் வேறு பகுத்தறிவு வேறு என்று புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.இதை எல்லாம் பார்க்கும் போது வெறும் ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு ஐந்து மொழிகளில் சரளமாய்ப் பேசி நாடுகள் பல சுற்றி எக்கச்சக்கமான உலக அறிவுடன் திரியும் எனது நண்பனிற்கு முன்னால் போய் கால்மடக்கி உட்கார்ந்து அவன் வாழ்வியல் அனுபவங்களைக் கேட்க வேண்டும் போல இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *