The death over show of 2014 T20 WC

T20 உலக கிண்ணம் 2014 இல் இலங்கை அணி தலைவராக தினேஷ் சந்திமல் செயற்பட்டார்! அந்த சுற்றுதொடரில் சந்திமல் இனது அடைவு மிக மோசமானதாக காணப்பட அவர் தனது தலமைத்துவத்தை துறந்து அணியில் இருந்து விலகி கொண்டார்! இதனை தொடர்ந்து லசித் மலிங்கா விற்கு அணியை தலமை தாங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது . இலங்கை அணிக்கு T20 உலக கிண்ணத்தை பெற்றுதந்த தலைவர் எனும் பெருமை மலிங்காவிற்குண்டு! இந்த உலக கிண்ண வெற்றி இலங்கை இரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த வெற்றி ஆகும்! அதற்கு காரணமாக இரண்டு விடயங்களை குறிப்பிடலாம்! ஒன்று 5 உலக கிண்ண தோல்விகளின் பின் கிடைத்த ஒரு உலக கிண்ண வெற்றி மற்றையது சங்கா மஹில எனும் இலங்கை கிரிகெட் இன் இரு துருவங்களின் பிரியாவிடை போட்டி! இவ்வாறான காராணங்களால் இன்றளவும் இவ் உலக கிண்ணத்தை இலங்கை இரசிகர்கள் நியாபகம் வைத்திருக்கின்றனர்!

இந்த மறக்க முடியா வெற்றியை இலங்கை அணி பெற காரணமாக அமைந்தவர்கள் லசித் மலிங்கா, நுவன் குலசேகர மற்றம் சசித்ர சேனாநாயக்க ஆகியோர் தான்! இருபது ஓவர்களில் மிகச்சிறிய இலக்கு என்பதால் சங்கா மஹில பெரேரா போன்றோரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை வெற்றியை சுவைத்தது! ஆனால் அந்த வெற்றிக்கான முழு பெருமையும் இந்த பந்துவீச்சு கூட்டணியிற்கு தான்!

இருபதுக்கு இருபது போட்டியானது வேகமாக அடித்தாடி அதிகமான ஓட்டங்களை குவிக்கும் கிரிகெட் இன் ஓர் வடிவம் ஆகும்! இதை Modern Cricket என்பர்! இவ் Modern cricket இல் Power Hitting இன் வகிபாகம் தான் அதிகம்! இவ்வாறான ஒரு Format இல் இறுதி நான்கு ஓவர்களும் Power play போன்றே கருதப்படும் .இந்த நான்கு ஓவர்களிலும் அணி குறைந்த்து 40 ஓட்டங்களையாவது பெறும்!


இப்படிபட்ட ஒரு வழமையுள்ள format இல் உலக கிண்ண இறுதி போட்டியில் உலகின் மூன்று சிறந்த துடுப்பாட்ட வீரர்களை வைத்து வெறுமனே 19 ஓட்டங்களை இறுதி நான்கு ஓவர்களில் வழங்கினார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் மலிங்க – குலசேகர – சேனாநாயக்க கூட்டணி அந்த சாதனையை நிகழ்த்தியது!

இதுவரை இடம்பெற்ற T20 உலக கிண்ணங்களில் முதல் இரண்டு உலக கிண்ணங்கள் பந்துவீச்சாளர்களின் சுற்று தொடர் என கிரிகெட் விமர்சகர்களால் கூறப்பட்டது! அதற்கான காரணம் அவ்விரு சுற்றுதொடர்களிலும் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமே அதிகம் காணப்பட்டது! எனினும் T20 இன் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க T20 உலக கிண்ணம் துடுப்பாட்ட வீரர்கள் ஆதிக்கத்திற்குள்ளானது! பந்துவீச்சாளர்களின் சுற்றுதொடர் என அழைக்கப்படும் முதல் இரு உலக கிண்ண இறுதி போட்டிகளிலேயே இறுதி நான்கு ஓவர்களில் (அதாவது Death Over களில்) சராசரியாக 44 ஓட்டங்கள் பெறப்பட்டன! இதுவரை இடம்பெற்று முடிந்துள்ள உலக கிண்ண இறுதி ஆட்டங்களில் Death over களில் பெறப்பட்ட ஓட்டங்களின் சராசரி 37.8 !

இதுவரை நடந்துமுடிந்த 6 உலக கிண்ண இறுதி ஆட்டங்களின் முதல் இன்னிங்ஸ் இன் Death over களில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் 43 ஆகும்! இந்த சாதனையை இந்தியா 2009 ஆம் ஆண்டு நிலைநாட்டியது! அதே ஆறு இறுதி ஆட்டங்களின் Death Over களில் மிக குறைந்த ஓட்டங்களான 19 ஓட்டங்களை பெற்றதும் இந்தியா தான்!

2014 ஆம் ஆண்டின் உலக கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்தியா 111/2 எனும் மிக திடமான நிலையில் இருந்தது, அப்போது தான் மலிங்கா – குலசேகர – சேனாநாயக்க கூட்டணி Death over களை வீச வந்தது ! அதன்பின் அந்நான்கு ஓவர்களில் நடந்தவை எல்லாம் சரித்திரம்! கிரிகெட் உலகின் இரண்டு ஜாம்பவான்கள் உலக கிண்ண வெற்றியோடு பிரியாவிடை பெற்ற மறக்க முடியா சரித்திரம்!

இப்போட்டி இடம்பற்றது Shere Bangala National Stadium இல் ஆகும்! குறிப்பிட்ட இவ் உலக கிண்ணத்தில் இம் மைதானத்தில் Final , Semi Final அடங்களாக 13 போட்டிகள் இடம்பெற்றன! இந்த 13 போட்டிகளின் தரவின் படி முதல் இன்னிங்ஸ் இன் Death over களில் சராசரியாக 42 ஓட்டங்கள் பெறப்பட்டுள்ளன! இம் மைதானத்தில் தான் இந்தியா தனது அனைத்து Group stage போட்டிகளையும் ஆடியது ! இந்தியா வின் அறை இறுதி ஆட்டமும் இதே மைதானத்தில் இடம்பெற்றது!

ஆனால் இலங்கை அணி தனது அனைத்து Group stage போட்டிகளையும் வேறு மைதானத்தில் ஆடிவிட்டு அறை இறுதி மற்றும் இறுதி போட்டிகளையே இம் மைதானத்தில் ஆடியது! இறுதிபோட்டிக்கு முன் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 5 போட்டிகளை இம் மைதானந்தில் ஆட இலங்கை அணி அறை இறுதி போட்டியை மாத்திரமே ஆடியது! இந்தியா இம் மைதானத்தில் ஆடிய 5 போட்டிகளிலும் Death ஓவர்களில் 39 ஓட்டங்களை சராசரியாக பெற்றது! இவ்வாறு குறிப்பிட்ட மைதானத்தில் பல போட்டிகளில் ஆடி அனுபவத்தோடு இறுதி போட்டியையும் அதே மைதானத்தில் ஆடியது இந்தியா!

இறுதி போட்டியில் சேனாநாயக்க 17 வது பந்துவீச்சு பிரதியினை வீச வந்தபோது களத்தில் நின்ற துடுப்பாட்ட வீரர்கள் Kohli உம் Yuvraj Sing உம்! கோலி 70 ஓட்டங்களுடனும் யுவ்ராஜ் 7 ஓட்டங்களுடனும் இருந்தனர்! இதற்கு முன் இவ் உலக கிண்ண தொடரில் கோலி 242 ஓட்டங்களை 121.0 எனும் சராசரி உடனும் யுவ்ராஜ் 89 ஓட்டங்களை 22.5 எனும் சராசரி உடனும் பெற்றிருந்தனர்! யுவ்ராஜ் அவ்வளவு போர்ம் இல் இல்லாத போதும் பவர் ஹிட்டிங் ஆடுவதில் கை தேர்ந்தவர் , கோலி இமாலய சராசரி உடன் அசுர போர்ம் இலும் இருப்பவர்! இவர்கள் இருவரிற்கும் பந்து வீசுவது அவ்வளவு இலேசான காரியம அல்ல! ஆனால் அதை இலேசாக்கியது இந்த பந்துவீச்சு கூட்டணி.

17 வது ஓவரில் நான்கே நான்கு ஓட்டங்களை கொடுத்தார் சேனாநாயக்க! அதனை தொடர்ந்து மலிங்கா 18 வது ஓவரில் 4 ஓட்டங்களை வழங்கினார் ! குலசேகர 19வது ஓவரில் யுவ்ராஜ் ஐ பெவிலியன் அனுப்பிவிட்டு 4 ஓட்டங்களை வழங்கினார்! அடுத்ததாக மைதானம் நுழைந்தது MS Dhoni! தோணி இவ் உலக கிண்ணத்தில் 47 ஓட்டங்களை 46 எனும் சராசரி இல் பெற்றிருந்தார்! இறுதி ஓவரில் மலிங்கா 7 ஓட்டங்களை வழங்கினார்! ஒட்டுமொத்தமாக நான்கு ஓவர்களில் 19 ஓட்டங்கள் மாத்திரமே இந்திய அணியால் சேகரிக்க முடிந்த்து! மிகவும் துல்லியமான நேர்த்தியான பந்துவீச்சு பிரதிகளை இம்மூன்று பந்து வீச்சாளர்களும் வழங்கினர்! மறுபுறம் மிகவும் பலம்வாய்ந்த அதிரடி ஆட்டக்கரார்கள் ! மூன்று பேரும் உலக கிண்ண ஹீரோக்கள்! எனினும் அவர்களால் இந்த பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் போனது!

லசித் மலிங்கா தோணியிற்கு வீசிய Wide Yorker களை கிரிகெட் இரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள்! The best Finisher கும் The best Death Bowler கும் இடைலான போர் இல் இறுதியில் The best Death Bowler ஜெயித்தார்!

குறிப்பிட்ட அந்த நான்கு ஓவர்களில் யுவ்ராஜ் 9 பந்துகளில் 4 ஓட்டங்களையும் கோலி 8 பந்துகளில் 7 ஓட்டங்களையும் மற்றும் தோணி 7 பந்துகளில் 4 ஓட்டங்களையும் மாத்திரமே பெற்றனர்! எந்தவித சிக்சர்களை பௌன்ட்ரிகளோ வழங்கபடவில்லை என்பது கூடுதல் தகவல்!

அதேசமயம் இவ் உலக கிண்ணத்தில் இறுதி போட்டியிற்கு முன் சேனாநாயக்க எந்த போட்டியிலும் Death over களில் பந்து வீசவில்லை! எனினும் மலிங்கா தான் வீசிய 3 ஓவர்களில் 29 ஓட்டங்களை 9.66 எனும் Economy Rate இல் வழங்கி இரண்டு விக்கட்களை கைப்பற்றி இருந்தார்! அதேசமயம் குலசேகர தான் வீசிய மூன்று ஓவர்களில் 25 ஓட்டங்களை 8.33 எனும் Economy rate இல் வழங்கி மூன்று விக்கட்களை கைப்பற்றி இருந்தார்! எனினும் இறுதி போட்டியில் மலிங்கா வீசிய இரண்டு ஓவர்களில் 11 ஓட்டங்களை 5.5 எனும் Economy rate இல் வழங்கி ஒரு விக்கட் இனை கைப்பற்ற குலசேகர ஒரு ஓவர் இனை வீசி 4 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கட்டை வீழ்த்த சேனாநாயக்க ஒரு வீசி 4 ஓட்டங்களை வழங்கினார்!

இறுதி போட்டி ஆட இருக்கும் மைதானத்தில் முன்னரே 5 போட்டிகளில் ஆடிய அனுபவம், முதல் இன்னிங்ஸ் இன் death over இல் அணிகளால் பெறப்பட்ட ஓட்டங்களின் சராசரி 40 இற்கும் அதிகம், களத்தில் அனுபவ வாய்ந்த உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் 111/2 எனும் திடமான நிலையில் இருந்தும் இந்திய அணியால் இறுதி நான்கு ஓவர்களில் வெறுமனே 19 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது!

இது துடுப்பாட்ட வீரர்களின் சறுக்கல் என்பதைவிட பந்துவீச்சாளர்களின் சாமர்த்தியம் என்றே நான் சொல்வேன்!

லசித் மலிங்கா அணி தலைவராக உலக கிண்ணம் வென்று சங்கா மஹிலவிற்கு பிரியாவிடை கொடுத்தார் எனபதை விட பந்துவீச்சாளராக வென்று பிரியாவிடை கொடுத்தார் என்பதே சிறந்தது!

T20 உலக கிண்ண வரலாற்றில் இறுதி நான்கு ஓவர்களில் வழங்கப்பட்ட அதி குறைந்த ஓட்டங்கள் கிரிகெட் உலகின் இரண்டு ஜாம்பவான்கள் புன்னகையுடன் கிரிகெட் இல் இருந்து விடைபெற உதவியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *