ஆண் ,பெண் உதடுகள்நாளுக்கு நாள் கருமையாவதாக நினைக்கிறீர்களா இதை செய்தால் உதடு சிவப்பு ஆகிவிடும்

ஆண்கள் பெண்கள் கருமை நிறத்திற்கு மாறிய உதடுகளை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.

உதடுகள் நாளுக்குநாள் கருமையாவதாக நினைக்கிறீர்களா? மிருதுவான தன்மையையும், இளஞ்சிவப்பு நிறத்தையும் இழந்துவிட்டதாக கருதுகிறீர்களா? ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம், சுகாதார பிரச்சினைகள் தான் இதற்கு காரணம். மேலும் புற ஊதாக்கதிர் வீச்சுகள், அழகுசாதனப் பொருட்கள் பயன்பாடு, உதடுகள் உலர்தல் போன்றவையும் பொதுவான காரணங்களாகும். கருமை நிறத்திற்கு மாறிய உதடுகளை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம்.

* மஞ்சளில் இருக்கும் குர்குமின், சருமத்திற்கு இயற்கையான நிறத்தை வழங்கும். அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை அதே அளவு ரோஸ் வாட்டரில் கலந்து கொள்ள வேண்டும். முதலில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து உதட்டில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும். பின்பு மஞ்சள் பேஸ்டை உதட்டில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவிவிடலாம். இதுபோல் தினமும் இரண்டு முறை செய்யுங்கள்.

உதடுகள் வறட்சியாகவோ, கடின தன்மையுடனோ இருந்தால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இது ஈரப்பதத்தை தக்கவைக்கும். தேன், சர்க்கரை கொண்டு உதட்டை சுத்தப்படுத்தியப்பின்பு தேங்காய் எண்ணெய் தடவலாம். தினமும் இரண்டு முறை செய்துவந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

* இளஞ்சிவப்பு நிற உதடு கொண்டிருந்தவர்கள் மீண்டும் உதட்டு நிறத்தை மீட்டெடுக்க மாதுளை பழத்தை உபயோகிக்கலாம். ஒரு டீஸ்பூன் மாதுளை பழச்சாறுடன் அதே அளவு பீட்ரூட் சாற்றை கலந்து உதட்டில் தினமும் 2 முறை தடவி வர வேண்டும்.

* கற்றாழை இயற்கையாகவே தோல் நிறமிகளை அகற்றும் தன்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை எடுத்து உதட்டில் தடவி, உலர்ந்ததும் கழுவி விடலாம். இதை தினமும் இரண்டு, மூன்று முறை செய்து வரலாம்.

* எலுமிச்சை பழம் இயற்கையாகவே சருமத்தை சுத்தப்படுத்தும். ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் உதட்டை கழுவிவிடலாம்.

source-helthtamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *