இதய நோயை கட்டுப்படுத்தும் வெங்காய தேநீர்-(உயர் இரத்த அழுத்தம்இதய நோயை)

வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

தேநீர் பிரியர்களை வசப்படுத்துவதற்காக பலவகையான தேநீர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் வெங்காய தேநீரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர் பருகுவது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாகவும் அமையும்.

உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் வெங்காயத்தில் உள்ள குர்செடின் கெட்ட கொழுப்பை குறைக்க துணைபுரியும்.

வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் ரத்த உறைவை தடுக்கவும் உதவும். வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. வெங்காய தேநீர் தயாரிப்பது எளி தானது. வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1
பூண்டு பல் – 3
தேன் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
பிரியாணி இலை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைக்க வேண்டும்.

தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் வெங்காயம், பூண்டு, பிரியாணி இலை போன்றவற்றை போடவும். அவை நன்றாக வெந்ததும் தண்ணீர் நிறம் மாறத்தொடங்கும்.

அதன்பிறகு பாத்திரத்தை இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.

அதில் தேன், லவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.

இந்த வெங்காய தேநீரை தினமும் காலையில் பருகலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும்.

sourc-tamilnewspaper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *