இறுதியாக காதல் கணவரை முத்தமிட்டு வழியனுப்பிய – நெஞ்சை உருக்கும் வீடியோ!

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா (39) நேற்று முன்தினம் மதியம் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மூச்சுத் திணறல் காரணமாக போராடியுள்ளார். உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுய நினைவு இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. வளர்ந்து வந்த இளம் ஹீரோவின் மரணத்தை தற்போதுவரை அவரது நெருங்கிய நண்பர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதையடுத்து நடிகை பிரியாமனி, நடிகர் அல்லு சிரீஷ், குஷ்பு , கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலரும் அவரது இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

source-tamilnewspaper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *