காயங்களுடன் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண திடுக்கிடும் காரணம்

தஞ்சை அருகே ரத்த காயங்களுடன் காரில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்டார். அந்த பெண்ணை மீட்ட போலீசார், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள சானூரப்பட்டி கடைவீதி அருகே உடலில் ரத்த காயங்களுடன் வடநாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று மதியம் நடந்து வந்தார்.

அப்போது அந்த பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், பாதுகாப்பு பணியில் இருந்த செங்கிப்பட்டி போலீசாரும் அப்பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பெண்ணிடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த அந்தப்பெண் பெங்களூருவில் குடும்பத்தினருடன் தங்கி இருந்ததாகவும், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு ஒரு நபர் அழைத்து வந்து 5 மாதங்களுக்கு முன்பு சேர்த்து விட்டுள்ளார். அந்த வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி ஆகியோர் அந்த பெண்ணை துன்புறுத்தி உள்ளனர். நேற்று மதியம் வாகனத்தில் ஏற்றி அந்த பெண்ணை கொடுமைகள் செய்து செங்கிப்பட்டி அடுத்த பூதலூர் பிரிவு சாலை அருகே விட்டு சென்றதாக போலீசாரிடம் அந்த பெண் கூறினார்.

அதன் பேரில், செங்கிப்பட்டி போலீசார், அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? சம்மந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் யார், பெண்ணை காரில் கொண்டு வந்து தாக்கியவர்கள் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாதர் சங்கத்தினர் அப்பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், பெண்ணை தாக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

source-tamilnewspaper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *