கொரோனாவிடமிருந்து உயிர் காக்கும் மருந்தாக மலிவான ஸ்டீராய்டு கண்டுபிடிப்பு என அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 81 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,40,390 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் இந்த வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவ வல்லுநர்கள் திணறிவருகின்றனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் குணப்படுத்துகிறது என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். இது மலிவாகவும் கிடைக்கும் என கூறி உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொதுவான ஸ்டீராய்டு மருந்து டெக்ஸாமெதாசோனின் குறைந்த அளவுகளை வழங்குவது, மிகக் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதங்களை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துள்ளதாக சோதனை முடிவுகள் தெரிவித்து உள்ளன.

ரெகவரி என அழைக்கப்படும் இங்கிலாந்து தலைமையிலான மருத்துவ பரிசோதனை குழு இந்த சோதனையை நடத்தி உள்ளது.”ஒரு பெரிய முன்னேற்றம்” என்று விவரிக்கப்பட்டுள்ள இந்த முடிவுகள், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இந்த மருந்து உடனடியாக தரமான ஒரு மருந்தாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சோதனை குறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் லாண்ட்ரே கூறியதாவது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *