திருமணமான ஓராண்டுக்குள் வங்கி மேலாளர் விபரீத முடிவு- சென்னை

சென்னைகணவன் தனக்கு ஹெல்ப் செய்யாததாலும், வேலை பளுவினால் கடுமையான மன அழுத்தம் காரணமாகவும் இளம்பெண் ஒருவர் ஃபேனில் தூக்கு போட்டு கொண்டார்.

ஊட்டியை சேர்ந்த தம்பதி ஹரி கணேஷ் – பிரிய தர்ஷினி.. இவர்களுக்கு கடந்த வருஷம்தான் கல்யாணம் ஆனது.. பிரியாவுக்கு 29 வயதாகிறது.

ஹரி கணேஷ் அம்பத்தூரில் உள்ள தனியார் பேங்கில் மேஜேனராக இருக்கிறார்.. பிரியா நுங்கம்பாக்கத்தில் பிரைவேட் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களின் வீடு விருகம்பாக்கத்தில் உள்ளது.

இந்த நிலையில் பிரியா, வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இதையடுத்து, கேகே நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையையும் தொடங்கினர்.

தற்போது லாக்டவுன் என்பதால், பிரியா வீட்டில் இருந்து கொண்டே வேலை பார்த்து வருகிறார்.. சம்பவத்தன்றும் அப்படித்தான் வேலை பார்த்து கொண்டிருந்தார்.. வேலை விஷயம் காரணமாக ஹரிகணேஷிடம் ஏதோ உதவி கேட்டுள்ளார்.. அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது.. இதனால் 2 பேருக்கும் சண்டை வந்துவிட்டது.

அதற்கு பிறகு பிரியா கோபித்து கொண்டு ரூமுக்குள் போய் கதவை சாத்தி கொண்டு தூங்கிவிட்டார்.. அதேபோல, ஹரிகணேஷூம் தூங்க போய்விட்டார்.. மறுநாள் காலை கதவு திறக்காததை கண்ட ஹரி கணேஷ் டென்ஷன் ஆகவிட்டார்.. கதவை உடைத்து கொண்டு உள் ளே போனால், பிரியா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

வேலைப்பளு காரணமாக கொஞ்ச நாளாகவே பிரியா மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.. இந்த மன அழுத்தத்துக்கு சில மாதங்களாக ட்ரீட்மென்ட்டும் எடுத்து வந்தாராம்.. இந்த மன அழுத்தத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்பத்தில் வேறு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.. கல்யாணமாகி ஒரு வருடமே ஆவதால், இது சம்பந்தமாக ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.

source-indaitamilnews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *